Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி1


அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..


நானும் என்னவனும்... இந்த கதையில் யார பற்றி சொல்ல போறேனா .. என்னோட வெரி க்ளோஸ் ப்ரண்ட், என்னோட உடல் நலத்துல அக்கறை எடுத்துக்கிற ஒருவன், என்னோட வாழ்க்கை ல நா ஒரு ஸ்டெடியா வரதுக்கு காரணமானவன்.. எனக்கு மட்டும் இல்லாம என்னோட
வீட்ல இருக்குற எல்லோருக்கும் பிடிச்ச ஒருவன்...அதனால தான் அவன என்னவனு சொன்னேன்.. அது சரி தானே நண்பர்களே!... அவனோட பேரு ராஜா (இந்த கதைக்காக நா வச்ச பேரு).. ஆள் பாக்க எப்புடி இருபன்னு சொல்லியே ஆகனும் சொல்லலனா நல்ல இருக்காது..


நம்ம ஹீரோ பாக்குறதுக்கு அச்சு அசலா குணால் மாதிரியே தான் இருப்பான். 5.10` ஹைட் 65கேஜி  வெயிட் நல்ல கலரான பய்யன் வயசு என்ன என்னோட ஒரு வயசு கூட இப்ப அவனுக்கு 25 ஆகுது.. சின்னதா அழகான உதடுகள். ஷார்ப்பா நீலமா கத்தி மாதிரி மூக்கு கொஞ்சம்
செம்பட்டை பாய்ஞ்ச நிறத்துல சுருள் சுருளா முடி.. அப்புறம் முக்கியமான ஒரு பாயிண்ட் அவனோட அடர்த்தியான மீசை...இதெல்லாம் வச்சு நீங்க அவன இமாஜின் பனுனாலும் சரி இல்ல குணால் போட்டோ வ கூகுள் பண்ணி பாத்தாலும் சரி...


நம்ம கதைய பத்தி சொல்லனனும்னா இது பழைய கதைகள் மாதிரி புல் செக்ஸ் சம்பந்தப்பட்ட கதை கிடையாது.. இது அன்பு பாசம் காதல் ஊடல் கோபம் எல்லாமே இருக்கும்.. கிட்டத்தட்ட எங்களுக்குள்ள நடந்த மொத்த நிகழ்வுகளையும் பத்தி சொல்ல போறேன்..இந்த கதை
ரொம்ப பெருசா போகும் என்ன கிட்ட தட்ட 4.5 வருசமா எங்களுக்குள்ள நடந்த நடந்துகிட்டு இருக்குற நிகழ்வுகள். அதுனால ஒவ்வொரு எபிசோடும் சின்ன சின்ன முடிவுகளோட தான் இருக்கும்..வாங்க எங்களோட வாழ்க்கைக்குள்ள போகலாம்.


.நம்ம ஹீரோ நான் எல்லாம் படிச்சது ஒரு காலேஜ் தான் ஆனா நா மானிங்  கிளாஸ் அவன் ஈவ்னிங் கிளாஸ்.. நா காலேஜ் விட்டு போகும் பொது தான் அவங்க காலேஜ் உள்ளே வருவாங்க..  காலேஜ் பைனல் இயர் நடந்துட்டு இருக்கும் போதே எங்க காலேஜ் க்கு  ஒரு பெங்களூர்
கம்பெனி கேம்பஸ் இண்டர்வியு வந்தாங்க..  எங்க காலேஜ் ல இருந்து நாங்க ஒரு 10 பேரு கேம்பஸ் இண்டர்வியு ல செலக்ட் அகிருந்தோம். எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது அன்னிக்கி பெங்களூர் கெளம்பனும்.. சாயந்தரம் 4 மணிக்கு பஸ்..டிக்கெட் புக் பண்றதுக்கு காசுலாம் குடுத்தாச்சு
ஆனா டிக்கெட் இன்னும் வரல.. எங்களுக்காக புக் பனிருந்த tnstc விரைவு பேருந்து ரெடியா இருந்தது...


நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் பஸ் ல ஏறி உக்காந்தாச்சு... என்ன பத்தி தான் உங்களுக்கு தெரியுமே நா கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி..எனக்கு டிக்கெட் இன்னும் கைக்கு வரலயேனு
ஒரே படபடப்பா இருந்தது.. உடனே என்னோட கிளாஸ் மேட்ஸ் ட்ட டேய் டிக்கெட் எப்ப டா தருவங்கனு கொஞ்சம் அதட்டைலாவே கேட்டேன்..அதுக்கு என்னோட கிளாஸ் மேட் டிக்கெட் குணால் கிட்ட இருக்கு..அடுத்து நான் உடனே யாரு குணால் யாரு குணால் நு கேக்க
ஆரம்பிச்சேன்..பின்னாடி இருந்து ஒரு சத்தம் "ஏய் என்ன அங்க சத்தம் டிக்கெட் இங்க தானே இருக்கு" கொஞ்சம் கரகரப்பான குரலில்.. திரும்பி பார்த்தேன் அது நம்ம ஹீரோவோட அப்பா.. புள்ளைய பத்தி பேசணும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டப்ப்ல.. சரி யாரு குணால் நு
கொஞ்சம் உத்து பாத்தேன் அவன் இன்னும் பஸ் ல ஏறல வெளிய நின்னுட்டு இருப்பன் போலிருக்கு..


ஒரு 5 நிமிஷம் கழிச்சி நம்ம ஹீரோ பஸ் ல ஏறுறார்.. அப்போ அவரோட அப்பா அவன் கிட்ட போய் ஏதோ பேசிகிட்டு இருக்கார் நானும் அவன் முகத்த பாக்கலாம்னு இருக்கேன் ஆனா அவங்க அப்பா மறைசிகிட்டு இருக்கார்.. என்ன பண்ண எப்படியும் பாக்கலாம்னு ஒரு நம்பிக்கை
இருந்தது ஏன்னா  ஒரே கம்பெனி ல தானே வொர்க் பண்ண போறோம் . அப்புறம் அவன் வந்து லெப்ட் சைடு ல இருக்குற சீட் ல அவங்க கிளாஸ் மேட்ஸ் ஓட உக்காந்தான் நா அவான திரும்பி பாத்தேன்.. ஆஹா என்ன ஒரு அழகான பய்யன் பக்க அச்சு அசலா குணால்
மாதிரியே இருந்தான். எங்க மாவட்டத்துல உதடு சிவப்பா இருக்குற ஒரே பய்யன் இவன்தான் இருபனொன்னு மனசுல ஒரு எண்ணம் தோனுச்சு.. அவ்ளோ அழகா சிவப்பான உதடு.. கருப்பு கலர் ட்ஷிர்ட் காக்கி கலர் காட்டன் பான்ட்  போற்றுந்தான். நா அவன திரும்பி திரும்பி
பாத்துட்டே இருந்தேன் அவனும் ஒரு முறை என்ன பார்த்தான். நா அவன பத்து சிரிச்சேன் அவனும் லைட் அஹ சிரிச்சான்..இந்த பையன நா நெறைய முறை காலேஜ் ல பாத்த்துருக்கேனே ஆனா ஒரு வாட்டி கூட பேசுனது கிடையாது.


பஸ் கெளம்ப ஆரம்பிச்சது பஸ்க்கு வெளியில் எங்க அம்மா அப்பா என்ன விட்டு பிரியுற சோகத்துல கண்ணுல வருகிற கண்ணீர  அடக்கிகிட்டு என்ன வளியனுபுனாங்க..பஸ் கெளம்பி பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வந்துட்டு..அப்புறம்  எல்லாரும் அவங்க அவங்க கொண்டு வந்த
ஸ்நாக்ஸ் கூல் ட்ரிங்க்ஸ் லாம் குடிக்க ஆரம்பிச்சோம்..ஒரு 4 மணி நேரம் கழிச்சி பஸ் திண்டுக்கல் பக்கத்துல இருக்குற ஒரு சரவணா பவா ஹோட்டல் ல நிருதுனான்.. எல்லாரும் டின்னெர் சாப்ட இறங்குனோம். சில பேர் பரோட்டா சாப்ட போனாங்க நா குணால் அப்புறம்
அவங்க கிளாஸ் ல உள்ள இன்னொரு பய்யன் எல்லாரும் இட்லி சாப்ட போனோம். டிராவல் பண்ணும் பொது இட்லி தான் பெஸ்ட் பூட் நு பேசிகிட்டே சாப்ட்டு முடிச்சோம்.. எங்க கூட இன்னொரு பய்யன் வந்தான் ல அவன எனக்கு அல்றேஅடி தெரியும்.. எக்ஸாம் எழுதும் பொது
ஒன்னதான் பஸ் ஸ்டான்ட் க்கு போவோம்.. அவன்தான் என்ன  குணால் த அறிமுகம் படுத்திவச்சான் .. குணால் 3 வாழைபழம் வாங்கிட்டு வந்து ஆளுக்கு ஒன்னு குடுத்துட்டு அவனும் சாப்பிட்டான். பஸ் கெளம்புற வரை 3 பெரும் கொஞ்சமா பேசிட்டு அப்றமா பஸ் ல பொய்
உக்காந்துகிட்டோம்..


பஸ் கெளம்பிட்டு.. எல்லாரும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.. மறுநாள் காலைல ஒரு 4 மணிக்கு பெங்களூர் சாந்தி நகர் பஸ் ஸ்டாண்ட் க்கு வந்தாச்சு.. அப்பா என்ன ஒரு குளிர்.. தக தக நு வெயில் அடிக்கிற ஊர்ல இருந்து வந்த எங்களுக்கு அந்த குளிர் கொஞ்சம் கஷ்டமாவே தான்
இருந்துச்சி..அப்புறம் ஒரு வழியா கம்பெனி இருக்குற ஏரியாவுக்கு போகுற பஸ் அ கண்டு பிடிச்சி அதுல ஏறி அந்த அறிவுக்கு போய்ட்டோம். யாருக்குமே கன்னடா தெரியாது.. தப்பு தப்ப இங்கிலீஷ் ல  பேசித்தான் போனோம். கம்பெனி ல இருந்து ஒரு அப்பர்ட்மெண்ட் கெஸ்ட்
ஹவுஸ் குடுத்துருந்தாங்க.. அங்க போனோம்.. எல்லாரும் ரெப்ரெஷ் ஆக ரெடி ஆனோம் ஆனா இதுக்கு முன்னாடி இருந்த பசங்க ரூம நாஸ்தி பண்ணி வச்சிருந்தாங்க.. அத கிளீன் பண்ண ஒரு ஆள் ரெடி பண்ண அந்த ரூம் ல இருந்த ஒரு நபர் ஹெல்ப் பண்ணுனார்.. அப்போ நா
ப்ரஷ் பண்ணுறதுக்காக வாஷ் பாஸின் போனேன் அங்க ரொம்ப அசிங்கமா கவர் அது இதுன்னு இருந்துச்சி..நா அத என்னோட கைய வச்சி எடுக்க போனேன்.. அப்போ "ஜெ நில்லு அதுல கை வைக்காத".. திரும்பி பார்த்தேன் நம்ம ஹீரோ.. சச்சச்ச நம்ம கூட படிச்ச பசங்களே
பாத்துட்டு சும்மா தான் போனாங்க.. ஆனா இந்த பயனுக்கு நம்ம மேல இவ்ளோ அக்கறையா?? ஒரு நிமிஷம் கொஞ்சம் மெல்ட் ஆகிட்டேன்.. அப்புறம் நா அந்த ஆட்கள் கிளீன் பனுன அப்றமா தன ரெப்ரெஷ் ஆனேன்.. மனசு பூரா நம்ம ஹீரோவா சுத்தி சுத்தி தான் வந்துச்சி..


(தொடரும்)

No comments:

Post a Comment