Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி 13

என்னோட ரூம் mates உம் ராஜாவோட ரூம் மேட்ஸ் உம் ஓட்டுரத வச்சே மத்தவங்க எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க... எனக்கு அவமானமா இருந்துச்சி.. நா இதே மாதிரி எவ்ளவோ பாத்துருக்கேன் எனக்கே இப்படி நா ராஜா இத மாதிரி எதையுமே பத்தாது
இல்ல .. அவனுக்கு இது ரொம்ப கஷ்டமா தான்  இருக்கும்..அந்த சம்பவத்துக்கு அப்றமா அவன் ஏன் கிட்ட வந்து எதுவும் அவ்ளவா பேசுறதே இல்ல..பேசுறத ரொம்ப கம்மி பண்ணிட்டான்.. நானும் அவன் போக்குல விட்டுட்டேன்.. நமக்கு ஏன் பிரச்சினை நம்மளால அவனுக்கு
ப்ரொப்லெம் வரகூடாது...இப்படியே கொஞ்ச நாள் போச்சு.....


நாங்க எல்லாரும் யுனிவேர்சிட்டி விஷயமா ஒரு நாள் ஹோசூர் போக வேண்டி இருந்தது மத்த எல்லாரும் அன்னைக்கி வொர்க் இருக்கு வர முடியாதுன்னு சொல்லிடாங்க.. சோ வேற வழியே இல்ல நானும் ராஜாவும் தான் போகவேண்டியதா இருந்துச்சி..2 பெரும் கெளம்பி
போனோம்.. மறுபடியும் 2 பேருக்கும் பேசுறதுக்கு நல்ல நேரம் கிடைச்சிது.. நானும் இந்த நேரத்த யூஸ் பண்ணி அவனுக்கு நெறைய விஷயத்த புரிய வைக்கனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்...
2 பேரும் சில்க் போர்டு பஸ் ஸ்டாண்ட் ல இருந்து ஹோசூர் பஸ் ஏறுனோம்.. ஏறி சீட் ல உக்கந்தாச்சி.. பஸ் வேகமா போகும் போது ஜன்னல் வழியா சீரிபாயுற காத்து  நம்ம மனசுல இருக்குற சோகத்த எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோசமா இருக்க வச்சிது..அப்போ தான் நா
அவன் கிட்ட பேச்சு குடுத்தேன்..


நான்: ராஜா...
ராஜா : என்ன டா??
நான் : நீ ஏன் முன்ன மாதிரி ஏன் கிட்ட பேச மாட்டுக்க ??
ராஜா : காரணம் உனக்கு தெரியாதா??
நான் : தெரியும்... ஆனாலும் எனக்கு உன் கிட்ட பேசாம இருக்கணும்னு தோனல
ராஜா : எனக்கும் பேசாம இருக்கணும்னு ஒன்னும் இல்ல.. பட் நம்ம ரூம் பசங்க வாய அடைக்க இத தவிர வேற வலி இல்ல ...
நான் : நீ சொல்றது சரி தான் ஆனாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு..
ராஜா : எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா .. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும்..
நான்: ஆனா நாம 2 பேரும் தனியா  ரூம் எடுத்து தாங்குண நமக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் இருக்காது.. நல்ல ஜாலி ஆ இருக்கலாம்..
ராஜா : தனி ரூம் ஆ.. அதுலாம் செட் ஆகுமா ??
நான்: ஆகும் டா!....அது மட்டுமில்லாம நாம 2 பேரும் நல்ல விதம் விதமா சமைச்சி சாப்டலாம்
ராஜா : ஆமால.. நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்..(பய புள்ள சாப்பாடு நு சொன்னதும் யோசிக்க ஆரமிச்சிட்டான்)..
நான்: ஆமா டா .. நீ நல்ல யோசி உங்க வீட்ல கூட கேட்டு பாரு..அவங்க சரி நு சொன்ன நாம தனி ரூம் போகலாம்..
ராஜா : சரி டா நா வீட்ல கேட்டுட்டு சொல்றேன்...
நான் : ஓகே டா (மனசுக்குள்ள  அவன் தனி ரூம் போக ஓகே சொன்ன மாதிரி ஒரு சந்தோசம்)..


ஒரு வழிய ஹோசூர் ல உள்ள வேலையெல்லாம் முடிச்சிட்டு பெங்களூர் க்கு கெளம்புனோம்...பஸ் ஏறி பெங்களூர் சில்க் போர்டு க்கு வந்தாச்சு... அப்போ நம்ம சிவா பூஜை ல வந்த கரடி ராஜா வுக்கு போன் பண்ணுச்சி..


நா கால் வரும் போதே பாத்துட்டேன் அந்த நாதாரி தான் பண்ணுது நு.. ஏதோ இவன் கிட்ட குசு குசு நு சொன்னான்.. அப்புறம் ராஜாவும் சரி நா வரேன்னு சொல்லிட்டான்.. என்னவா இருக்கும் அப்டின்னு எனக்கு ஒரே யோசனை .. அதுகப்ரம் ராஜா அவன் கிட்ட நீ ஜெ.. கிட்டயும்
கேளு டா சொன்னான்.. ஆனா அவன் ஏன் கிட்ட எதையுமே கேக்கல..எனக்கு மைண்ட் ல ஒரு சின்ன சந்தேகம் இவனுக சரக்கடிக்க பிளான் பண்றாங்களோ நு...


நா உடனே ராஜா கிட்ட கேட்டேன் லைட் அஹ பேச்சு குடுத்தேன் அவன் என்ன தான் சொல்லிருப்பனு தெரிஞ்சே ஆகணும்ல ..
நான் : டேய் அவன் உன்ன சரக்கடிக்க தானே கூப்பிட்டான்...
ராஜா : ஆமா..
நான் : போன வாரம் தானே அடிச்சீங்க மறுபடி ஏன்டா இப்படி.. இப்படியே போச்சுனா அடிக்ட் ஆயருவீங்க டா..அப்புறம் ரொம்ப கஷ்டம் திரும்ப மீல்றது..
ராஜா : அடிக்ட் லாம் ஆகா மாட்டோம் டா. எங்களோட லிமிட் எங்களுக்கு தெரியும்
நான்: அப்டி இல்ல ராஜா .. நா ஏன் சொல்றேன்னு புரிஞ்சிக்கோ..
ராஜா : நா சொல்றத நீயும் புரிஞ்சிக்கோ..
நான்: கடைசியா ஒன்னு சொல்றேன் என்னோட பிரிஎண்ட்ஷிப் வேணும்னா குடிக்காத...இல்லனா குடி உன் இஷ்டம்.. ஆனா நீ குடிச்சான நா உன் குட பேசவே மாட்டேன்..
ராஜா : சரி பா நா குடிக்கல.. ஓகே வா நீ அமைதியா வா நு சொல்லிகிட்டே எங்க ஏரியா போற பஸ் ல ஏறி போய்ட்டோம்..


எனக்கு மனசு புல்லா அவன் குடிக்க கூடாதுன்னு ஒரு எண்ணம் தான் தோனுச்சி.. அதுனால எங்க ரூம்ல வைக்க வேண்டிய ஐடம் எல்லாத்தையும் வச்சிட்டு அவன கூட்டிட்டு அவன் ரூம் கு போயிட்டேன்.. டேய் இன்னைக்கி நைட் உங்க ரூம் ல தூங்குவோமா டா நு கேட்டேன்..
அதுக்கு அவன் பாக்கலாம்னு சொன்னான்..
அவனுக்கு அக்குள் கீழ உள்ள முடியெல்லாம் ஷேவ் பண்ணி கொஞ்சம் நாள் ஆச்சு அதுனால ஒரு புது ரேசர் வாங்கனும்னு ஓசூர் ல வச்சி சொன்னான்.. ஓசூர் லையே ஒரு ரேசர் வாங்கிட்டோம்..இப்ப அவங்க ரூம் போனதும் அத வச்சி ஷேவ் பண்ண போறேன்னு
சொன்னான்..தேவையான ஐடம் எல்லாம் எடுத்துட்டு பாத்ரூம் உள்ள போனான்..


(தொடரும்)

No comments:

Post a Comment