Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி6

சென்னை ல இருந்து கெளம்பி பெங்களூர் வந்துட்டேன்...பஸ்ல  வரும் போதே மனசுக்குள்ள ஒரு ப்லான்னிங் ஓடிட்டே இருந்துச்சி.. எப்படி இனி நம்ம காலத்த ஓட்ட போறோம், மறுபடியும் அந்த கொரங்குங்க கூட தான் தங்கணும், எப்படியும் அவனுக பேச மட்டணுக.. விதி வலியது
யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா ஒன்னு மட்டும் உண்மை நமக்குன்னு ஒருத்தன் மட்டும் இருந்த யார் என்ன பண்ணுனாலும் எந்த பிரச்சினையும் இல்ல.. ஓகே இனிமேல் சமச்சி சாப்புடுவோம் அதுல கொஞ்சம் காசு சேவ் பண்ணலாம் அது மட்டும் இல்லாம
ஹெல்தியும் கூட...இதே எல்லாம் நெனைச்சுகிட்டே பஸ் ஸ்டாப் ல இருந்து இறங்கி ரூம்க்கு போயிட்டேன்..


ரூம்க்கு போய் கதவ தட்டுனேன்.. அந்த நாதாரிங்க மூஞ்ச தான் பாக்கனும்னு நெனைச்சேன் ஆனா கதவ தெரந்தது நம்ம ஹீரோ.. அப்பத்தான் மனசுல கொஞ்சம் சந்தோசம்.. சரி ஆரம்பமே கொஞ்சம் சந்தோசமா தான் இருக்கு இனிமேல எல்லாம் நல்லதாவே நடக்கும்னு
நெனைச்சிட்டு உள்ள போனேன்.. அப்பவே மணி 10.. டிரஸ் லாம் மாத்திட்டு தூங்கிட்டேன்.. மறு நாள் காலைல எந்திச்சி ஆபீஸ் போனேன்.. எப்பவும் போல சிஸ்டம் ஆன் பண்ணி வொர்க் ஆரம்பிச்சிட்டேன்..கம்பெனி "CEO" அங்க இருந்து வந்தார்..


"CEO" : டேய் நீ இன்னும் ஊருக்கு போகலையா??
நான் : நா போயிட்டு வந்துட்டேன் சார்..
"CEO": நா உன்ன 3 மாசம் ரெஸ்ட் எடுக்க சொன்னேன்ல டா..
நான் : சார் நா டாக்டர் கிட்ட போய் செக் பண்ணுனேன், அவர் பின் எதுவும் இல்லாம இருக்குறதுக்கு மாத்திரை கொடுத்தார்..அதுகப்ரம் அங்க இருந்து என்ன பண்ணணு கெளம்பி வந்துட்டேன் சார் ..
"CEO" : சரி வெரி குட்.. இப்படிதான் இருக்கணும் இந்த வயசுல தான் சம்பாதிக்க முடியும்.. நீ ரொம்ப நேரம் லாம் வொர்க் பண்ண வேண்டாம் .. காலைல 9.30 வா சாயங்காலம் 5 மணிக்கு கெலம்பிரு.. உன் டீம் லீடர் எதாவது சொன்னன்ன ஏன் கிட்ட சொல்லு நா பாத்துகிறேன்..
நான் : ஓகே சார் ரொம்ப தேங்க்ஸ் ..


அன்னில இருந்து கம்பெனி ல தனி மரியாத கெடைச்சிது.. இந்த பய உடம்ப கூட பொருட்படுத்தாம வொர்க் பண்றனு சொல்லி.. "CEO" தனியா "HR" தனியா நு ஆள் ஆளுக்கு என்னோட ஹெல்த் ல கேர் எடுத்துகிட்டாங்க.. எனக்கு ரொம்பவே சந்தோசமா இருந்துச்சி.. என்னோட ரூம்
பசங்க மட்டும் வழக்கம் போல பேசவே இல்ல.. ஆனா இவ்ளோ பெருமைல இருக்குற எனக்கு அதுலாம் ஒரு மட்டேராவே தெரியல..சரி ஆபீஸ் ல எந்த வித பிரச்சினையும் இல்லாம திரும்பி ஜாய்ன் பண்ணியாச்சு சரி இனி சமைக்குரதுக்கு வழி பண்ணனும்.. சரி வர சாட்டர்டே
பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்..


வழக்கம் போல பிரைடே நைட் நம்ம ஹீரோ மற்றும் அவங்க ரூம் பிரண்ட்ஸ் லாம் வந்தாங்க.. நா நம்ம ஹீரோ கிட்ட அப்பவே cooking கு தேவையான  பொருட்கள் லாம் வாங்கனும்னு சொல்லி வச்சிட்டேன்..அவனும் சரி டா நா உன் கூட வரேன்னு சொல்லிட்டான்..அப்புறம் மறு
நாள் காலைல எந்திச்சி குளிச்சி பிரேக் பாஸ்ட் சாப்டுட்டு ஒரு 11 மணி வாக்குல நா அவன கூட்டிட்டு போய் சின்ன காஸ் மற்றும் சில பாத்திரங்கள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம்..இத என்னோட ரூம் பசங்கலாம் பாத்துகிட்டே இருந்தாங்க..ரொம்ப தூரம் போய் அலைஞ்சி
வாங்குனதுனால செம்ம டிரேட் ஆகிட்டேன்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ருசி அங்கிள் த போய் மட்டேற சொல்லலாம்னு போனேன்.. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன்.. அதுக்கு அவர் சரி வந்துட்ட இனிமேலாவது பத்திரமா இருந்துக்கொனு சொன்னார்..


நா நைட் ரூம்ல சமைக்க போறேன்னு அவர் கிட்ட சொல்லிட்டு ரூம்க்கு போயிடு இருக்கேன் அங்க போற வழில ஏன் ரூம் பசங்க நம்ம ஹீரோ வ கூட்டிட்டு கடை கடையை சுத்திகிட்டு இருக்காங்க..சரி எதாவது ஸ்நாக்ஸ் வாங்க போவனனுகனு நெனைச்சிட்டேன்.. ரூம் ல போய்
பாத்தா இன்னொரு காஸ் இருக்கு.. ஓஹோ இவனுகளும் சமைக்க போறங்கனு நெனைச்சிட்டேன்..வெளிய போயிட்டு ரூம் கு வரும்போது கைல பத்திரம் ஆப்பை நு எல்லாத்தையும் வாங்கிட்டு என்னமோ மலையையே தூக்கி சாதிச்ச மாதிரி வந்தானுக.. ஒரு பக்கம் சிரிப்பு சிரிப்பா
வந்துச்சி..இன்னொரு பக்கம் நா எப்பவும் போல என்னோட வேலைய மட்டும் பாத்துகிட்டு இருந்தேன்..


எங்க ரூம்ல ஒரு ஏள்வழி இருக்கான்.. அவன் எங்க காலேஜ் கிடையாது நாங்க ஜாயின் பண்ணி 2 மந்த்ஸ் அப்றமா தான் அவன் ஜாயின் பனுனான்.. தங்க ரூம் இல்லன்னு ஏன் கிட்ட வந்து கண்ணீர் விடாத குறைய சொன்னான்.. நான் தான் சரின்னு சொல்லிடு ஏன் ரூம் பசங்க
கிட்ட சொல்லி அவன ரூம் ல சேத்தேன் ஆனா அதுக்கான நன்றிய அவன் அப்ப அப்ப காட்டிகிட்டே தான் இருந்தான்.. நாம செய்ற நல்லதுலாம் நமக்கே எதிர திரும்பும்னு சொல்லுவாங்க அது அவன் மேட்டர் ல ரொம்ப கரெக்ட் (அவன் பன்னுனதேல்லாம் விவரமா சொல்ல
விரும்பல)...அந்த பய ஏன் கிட்ட வந்து டேய் உனக்கு முன்னாடியே நாங்க சமைக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்..ஆனா நீ எங்களுக்கு முன்னாடி சாமான் வங்கிட்ட சோ கிட்சென் ல பாதிய  எங்களுக்கு குடு நு சொன்னான்.. நானும் சரி எடுத்துக்கோ நு சொல்லிட்டேன்
சும்மா எங்களுக்கு கிட்சென் ல பாதி இடம் வேணும்னு கேட்ட குடுக்க போறேன்.. இதுக்கு எதுக்கு இப்படி லாம் சொல்லணும் இதுலயும் ஈகோ வானு மனசுல நெனைச்சிட்டேன்..


நான் நம்ம ஹீரோ கிட்ட டேய் இன்னைக்கு நைட் நா சப்பாத்தி போட போறேன் நீயும் சப்டுனு சொன்னேன்.. அவன் இல்ல அவனுகளும் சப்பாத்தி தான் போட போரனுகலாம் நா 2 பேரு குள்ளதயுமே சாப்புடுறேன் அப்டி நு சொல்லிட்டான்.. நா சரின்னு சொல்லிட்டு வேலைய
ஆரம்பிச்சிட்டேன் ராஜாவும் எனக்கு ஹெல்ப் பண்ணுனான்...



நா சப்பாத்தி போட்டு தக்காளி சட்னி வச்சி முடிச்சிட்டேன்.. ஆனா அவனுக இன்னும் மாவ தெஇக்கவெ இல்ல..எங்க ரூம்ல ஒரு குண்டன் இருக்கான் அவன் வயிறு மட்டும் ஒரு பெரிய மண் பானைய ஓட்ட வச்சா எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கும்.. அவன் தான் அந்த
குரூப் கு செப்.. அவன் ஒரு எக்ஸ்பெர்ட் ரேஞ்சுல சமைக்குரத பாத்தா நைட் பூரா சிரிக்கலாம்.. அவாள் தான் சப்பாத்தி போட்டு எடுத்துட்டு இருந்தார்..இதுல அந்த பலூன் சைஸ் மூஞ்ச கெத்தா வச்சிட்டு இருக்கான்.. அத விட பெரிய காமடி இருக்க முடியாது


ஒரு வழியா சமைச்சி முடிச்சி எல்லாரும் சாப்டுட்டு படுத்து தூங்கியாசி..மறுநாள் ஆபீஸ் ல வச்சி நம்ம ஹீரோ கிட்ட போய் பேசிகிட்டு இருந்தேன்..


நான் : டேய் என்ன நேத்து ரொம்ப வேலை போல..
ஹீரோ: ஆமா டா உன்கூடையும் வந்து சாமான் எல்லாம் வாங்குனேன்.. உன் ரூம் காரனுக வேற என்னையே கொட்டிட்டு போய்டாங்க.. ஒரே அலைச்சல் ரொம்ப டிரேட் ஆ இருக்கு..
நான் : அவங்க கூப்பிட்டா ஏன் போற வரலன்னு சொல்லலாம்ல..
ஹீரோ: நா வரல கடை இந்த ஏரியா ல தான் இருக்கு போங்க நு சொன்னேன்.. ஆனா அவங்க ஜெ கூட மட்டும் போற எங்க கூடையும் வா நு சொல்லிட்டாங்க..சரி போகாம இருக்க முடியாதுன்னு போனேன்
நான் : சரி என்னவாம் திடீர்னு சமைக்க ஸ்டார்ட் பண்ணிடாங்க..
ஹீரோ : நீ ஸ்டார்ட் பனுநல அத பாத்துதான்
நான் : அட பாவிங்களா இதுலயும் ஈகோ வா
ஹீரோ : யாம்ல உன் ரூம் பசங்க இப்படி இருக்காங்க
நான் : அது தெரிஞ்ச நான் ஏன் அவங்க கூட பேசாம இருக்க போறேன்..
சரி எனக்கு வொர்க் இருக்கு நா வரேன்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்..


அப்போதான் யோசிச்சேன் இவனுகளுக்கு நாம என்ன பனுனாலும் அவனுகளும் பண்ணுவாங்க போலிருக்கு.. என்னும் பொய் தொலையட்டும்.. ஆனா நமக்கு சப்போர்ட் பண்ண ஒருத்தன் வேணும்... அந்த ஒருத்தன் யாரா இருக்கலாம் நு யோசிசிகிட்டே இருந்தேன்..


மொத்தம் 2 ரூம்லயும் செத்து 11 பேரு என்னோட சேத்து.. 10 ல அந்த ரூம்ல 2 பேர மட்டும் கதைல சேக்கலாம்.. அந்த 2 பேருல யாராவது ஒருத்தன நம்ம க்ளோஸ் ஆக்கிக்கணும்.. அத விட்டா நம்ம ரூம்ல ஒரே ஒருத்தன கரெக்ட் பன்னுனாதான் உண்டு.. அவன் தான் அந்த
குண்டன்.. ஆனா அவன் ரொம்ப சீன போடுவான்.. மத்தது எல்லாமே வேஸ்ட் பீஸ்..
சரி இந்த 3 பேரையும் டார்கெட் பண்ணுவோம்.. ஆனா குண்டன் ஏன் கூட சரியாய் பேச மாட்டான்.. இப்போதைக்கு மத்த 2 பேரையும் டார்கெட் பண்ணுவோம்(ஒன்னு நம்ம ஹீரோ இன்னொன்னு அவனோட ரூம் மேட்) யாரு நமக்கு ஒத்து வருவாங்கன்னு பாப்போம் நு முடிவு
பண்ணுனேன்.. அந்த 2 பேரு கிட்டயும் கொஞ்சம் க்ளோஸ் ஆ பழக ஆரம்பிச்சேன்.. தேவயாவும் தேவை இல்லாமலும் போய் போய் பேசுனேன்...


(தொடரும்)

No comments:

Post a Comment