Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி5

பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பிடும் 330 ரூபாய் கொடுத்து சென்னை டிக்கெட் வாங்கிட்டேன்.. மனசுக்குள்ள ஓடிகிட்டு இருந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் அது "அலெக்ஸ்"... யாரு இந்த அலெக்ஸ்??


நா காலேஜ் படிக்கும்போது காலைல 2 பெரும் ஒரே பஸ் ல தான் டிராவல் பண்ணுவோம்..எங்க ஊர்ல இருந்து நாலஞ்சி ஊர் தள்ளி இருக்குற கிராமம் தான் அவங்க ஊரு.. முதல்ல அவன யாருனே எனக்கு தெரியாது ..நா ஒரு நாள் பஸ்ல போகும்போது அவங்க ஊரு பஸ்
ஸ்டாப்ல அவன் ஏறுனான்.. அவன பாத்ததும் அவன பத்தி தெரிஞ்சிக்கணும்னு தோனுச்சி.. அலெக்ஸ் ஒரு 5.7 உயரம் ஒல்லியான பாடி நல்ல கருப்பு நிறம் பாக்க கொஞ்ச சுமாரா தான் இருப்பான்.. ஆனா அவனோட குழந்தை தன்மை மாறாத முகம் நம்மள திரும்பி திரும்பி பாக்க
வைக்கும்.அவனோட காலேஜ் டிரெஸ்ஸ பாத்தா என் பிரண்டோட காலேஜ் டிரஸ் மாதிரி இருந்துச்சி சோ அவ கிட்ட இந்த பையன பத்தி கேட்டேன்.. அவளுக்கு இந்த பையன பத்தி தெரிஞ்சிருந்தது அவ சொன்னா.. அப்புறம் அவனோட நம்பர் வேணும்ல அப்னா தானே கடலை
போட முடியும்.. அதே ஊர்ல உள்ள இன்னொரு பய்யன் என்னோட ஸ்கூல் மேட் அவன் கிட்ட இருந்து அலெக்ஸ் நம்பெர வாங்கி அவனுக்கு மெசேஜ் பனுனேன் அவன் பிரான்ட் ஆகிட்டான்.. கதைல யாரு ஹீரோ நு உங்களுக்கு குழப்பம் வரலாம்.. ஹீரோ நம்ம ராஜா தான் .. இவர்
ஜஸ்ட் கெஸ்ட் அப்பெயரன்ஸ் தான்..


அலெக்ஸ் க்கும் எனக்கும் போன் காண்டக்ட் உண்டு, சென்னை ல தான் வொர்க் பண்றான் அவனோட சொந்தகார பய்யன் கூட ஸ்டே பன்னிருகுறதா சொன்னான்.. என்னோட கம்பெனி ல நோட்டீஸ் போடுறதுக்கு முன்னாடி அவன் கிட்ட போன் ல பேசுனேன்..அவன் கிட்ட "டேய்
சென்னை வந்த உன்னோட ரூம் ல தங்கிகாலமா? ன்னு கேட்டேன் அவனும் சரின்னு சொன்னான்" அந்த நம்பிக்கை ல தான் இப்ப சென்னை போயிட்டு இருக்கேன்.. பஸ் கெளம்பிடுச்சி அலெக்ஸ் க்கு போன் பண்ணி சொல்லிட்டேன் அவனும் சரி நீ வாடா பாத்துக்கலாம்னு
சொல்லிட்டான்.. மனசுல இப்பதான் ஒரு நம்பிக்கை வந்தது..


சென்னை போகிற வழில காஞ்சிபுரத்துல ஏதோ ஒரு அக்சிடென்ட் ஒரே டிராபிக் 9 மணிக்கு சென்னை பொய் சேர வேண்டிய பஸ் கிட்டத்தட்ட 11 மணி தாண்டிடுச்சி..நா அலெக்ஸ் க்கு போன் பண்ணி வர லேட் ஆகும்னு சொல்ல போன் பனுனேன்.. அவன் போன் எடுக்கவே இல்ல..
கொஞ்சம் நிம்மதியா இருந்த மனசு ஒரே திக் திக் நு ஆகிட்டு..4-5 தடவ ட்ரை பனுனேன் ரிங் போகுது ஆனா போன் அட்டெண்ட் பண்ண மாட்டுக்கான்.. அய்யயோ நம்ம நெலமை என்ன ஆகும்னு தெரியலையே.. ஒரு வழியா 1 மணிக்கு தான் கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் போனேன்..


அலெக்ஸ் க்கு போன் பனுனேன் அப்பா தான் அந்த படுபாவி பய அட்டெண்ட் பண்ணுனான்.. அவன் ஒரு பஸ் நம்பர் சொல்லி பல்லாவரம் பஸ் ஸ்டாப் ல இறங்க சொன்னான்..அதே பஸ் ல ஏறினேன்.. ஒரு 20 நிமிஷத்துல பஸ் ஸ்டாப் வந்துட்டு அங்க அலெக்ஸ் நின்னுட்டு
இருந்தான்.. அவன் பாத்ததும் குசலம் விசாரிச்சிட். நா மட்டும் தான் ரூம் ல இருந்தேன் கொஞ்சம் லேட் ஆதான் எந்திரிச்சேன்..பாத்ரூம் டாய்லட் எல்லாமே காமன் ஏரியா ல தான் இருந்துச்சி கிளீனா கூட இல்ல.. யார்வேனாலும் எந்த டாய்லட் ல வேணாலும் போகலாம் அத
பாத்ததுமே அருவருப்பா இருந்துச்சி.. சரி வேற வழி இல்லனுட்டு அதையே யூஸ் பனுனேன் .. குளிச்சி முடிச்சிட்டு சாப்டனும் வெளிய போகனும்ன யாராவது துணைக்கு இருந்தா நல்லா இருக்கும் பட் யாருமே இல்ல. சோ கிட்சென் ல இருந்த ஐடம்ஸ் வச்சி பூட் ரெடி பண்ணி
சாப்டேன்.. அப்றமா தனியா உக்காந்து கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நாம நம்ம கம்பெனியா விட்டு வந்தது தப்பா சரியானு ???.. பெங்களூர் ல இருந்து இதையே யோசிச்சு பாக்கும் போது 100% சரின்னு தோணுனது இப்ப கொஞ்சம் தப்போன்னு யோசிக்க தோனுச்சி..


சாயங்காலம் ஆச்சு அந்த ரூம் பசங்கலாம் வந்தாங்க.. அலெக்ஸ் என்ன அந்த பசங்களுக்கு இன்ட்ரோ பண்ணுனான்.. ஏதோ பேருலாம் சொன்னங்க ஆனா எனக்கு நியாபகம் இல்ல..நா கொஞ்ச நேரம் அலெக்ஸ் கிட்ட பேசிட்டு இருந்துட்டு அப்றமா மத்த பசங்கடையும் பேசுனேன்..
அலெக்ஸ்oda சொந்த கார பய்யன் வேற வேலைக்கு போறதாவும் அந்த ரூம காலி பண்ண போறதாவும் சொன்னான்..அந்த சொந்த கார பய்யன் பேச தொடங்கினான்.. நீங்க ஏன் பெங்களூர் விட்டு வந்தீங்க அது எவ்ளோ நல்ல ஏரியா தெரியுமா.. நீங்க நெனைக்குற மாதிரி சென்னை
ல வேலை கிடைக்குறது இல்ல அப்டி இப்டி நு ஓவர் பில்ட் அப்  குடுத்தான்.. அவன் பேசுறதெல்லாம் கேட்டு தான் ஆகணும் வேற வழி!.....


ரொம்ப நேரம் மொக்கைக்கு அப்றமா எங்கயோ போறேன்னு சொல்லிட்டு கெளம்பிட்டான்.. அப்பட தப்பிச்சன்டா சாமின்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன்.. இதுக்கு முன்னாடி 100% சரி நு தோணுன என்னோட முடிவு இப்ப 100% தப்புன்னு தோணுது..ஓகே இன்னும் யோசிச்ச மனசு
மாறிரும்.. உடனே என்னோட அசிஸ்டன்ட் டீம் லீடர் க்கு போன் பண்ணுனேன் எனா டீம் லீடர் லீவ் ல ஊருக்கு போயிருந்தார் ..நா இங்க ஊர்ல ஹாஸ்பிடல் ல உடம்ப செக் பனுனேன்.. அவங்க பெய்ன் இல்லாம இருக்குறதுக்கு டேபிலேட் குடுத்தாங்க நா நாளை கெளம்பி மண்டே
பெங்களூர் வந்து ஆபீஸ் கு வரேன்னு சொல்லிட்டேன்.. அவரும் சரி டா ரொம்ப ஹாப்பி.. சீக்கிரம் வா நு சொல்லிட்டார்..


அங்க போன தங்க ரூம் வேணும்ல.. நாம வந்த கேப் ல நம்ம ரூம் பரதேசிங்க ரூம்ல வேற யாராவது சேத்துருவாங்க.. அதுனால அவனுகளுக்கு போன் போட்டேன்.. நா நாளை வரேன்னு சொன்னேன்.. நா நெனைச்ச மாதிரியே தான் அவனுக பண்ணி வச்சிருன்தானுக.. டேய் நாங்க
இன்னொரு ஆள ரூம்ல சேத்துக்க முடிவு பண்ணிட்டோம் டா அட்வான்ஸ் கூட வாங்கிட்டோம் அப்டின்னு சொன்னங்க..இங்க பாருங்க நா முறைப்படி அந்த ரூம்  ரெண்ட் அக்ரீமெண்ட் ல சையின் பண்ணிருக்கேன் சோ நா அங்க தான் தங்குவேன் நீங்க வாங்குன அட்வான்ஸ்
திருப்பி குடுத்துருங்க நு சொல்லிட்டேன்.. அவனுங்க சரி டா (ரொம்பவும் சாட் ஆக) தொலஞ்சிதுனு நெனச்ச சனியன் திரும்பி வருதேன்னு நேனைச்சனுகளோ என்னவோ..


அலெக்ஸ் மற்றும் அவங்க ரூம் மேட்ஸ் தையும் சொல்லிட்டேன் நா நாளை ஊருக்கு போறேன்னு.. அவனுகளும் சந்தோசமா சரி போயிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க..மறுநாள் காலைல அலெக்ஸ் ஆபீஸ் கெளம்புனான் அவன் கூடயே நானும் கெளம்பிட்டேன்.. பல்லாவரம் பஸ்
ஸ்டாப் ல இருந்து கோயம்பேடு க்கு பஸ் ஏத்தி விட்டுட்டான்.. டேய் ரொம்ப தேங்க்ஸ் டா.. கூட படிச்சவங்களே கால வாரும் போது நீ எனக்கு ஹெல்ப் பண்ணிருக்க உன்ன என்னோட வாழ்நாள்ல மறக்க மாட்டேன் டா .. பாய் கீப் இன் டச் நு சொல்லிடு பஸ் ல
ஏறிட்டேன்..கோயம்பேடு வந்துச்சி, கோயம்பேடு ல இருந்து பெங்களூர் போற பஸ் ஏறிட்டேன்...
அங்க இருந்த 2 நாலா யூரின் வரவே இல்ல.. குஞ்சிலாம் ஒரே கடுப்பு.. அப்பா இந்த கிளைமட் நமக்கு செட் அகவே ஆகாதுப்பா...ஒரு வேலை அந்த கிளைமட் கூட நா சரியான ஒரு முடிவு எடுக்க காரணமா இருக்கலாம்..


(தொடரும்)

No comments:

Post a Comment