Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி2

ரூம் எல்லாம் நல்ல கிளீன் பண்ணியாச்சு அப்றமா ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வரதுக்கே மத்தியானம் ஆகிடுச்சி.. எல்லாரும் மொத்தமா கெளம்பி சாப்ட போனேன் அந்த ரூம் ல இருந்த ஒருத்தர் எங்களுக்கு ஒரு தமிழ் ஹோட்டல் அறிமுக படுத்தி வச்சார்.. எல்லாரும்
வேலைல ஜாஇன் பண்ணுன அப்றமா இங்கயே அக்கௌன்ட் வச்சி சாப்டுங்க நு சொன்னார்.. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.. சாப்டு முடிச்சிட்டு எல்லாரும் அப்பர்ட்மெண்ட் கு திரும்பினோம்.. என்கூட எங்க கிளாஸ் பசங்க 2 பேரு உண்டு நான் அவங்க கூட பேசிகிட்டே
போனேன். நம்ம ஹீரோ கிளாஸ் பசங்க 5 பேரு அவரோட சேத்து.. அவனும் அவங்க பசங்க கூட பேசிகிட்டே போனான்.. எல்லாருக்கும் செம்ம டயர்ட் 13 மணி நேரம் ட்ராவல்la.. கொஞ்ச நேரம் படுத்து தூங்குனா சரி ஆகிடும்னு நெனைச்சோம்.. பாதி பேரு தூங்கிட்டோம் பாதி பேரு
உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க..


 கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தாச்சு அப்புறம் நாளைக்கு ஆபீஸ் போறதுக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணனும்.. டிரஸ் எல்லாமே இருக்கு, நா காலேஜ் படிக்கும் போதே போடி ஸ்ப்ரே போடுவேன் ஆனா வீட்ல இருந்து கெளம்பும் போது எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. சரி புதுசா ஒன்னு வாங்கிக்குவோம் பட் யாராவது வாங்குறதுக்கு கூட வந்த நல்லா இருக்கும் இது புது இடம் வேற....


சரி நம்ம பசங்கட்ட கேட்டு பாப்போம் நு என் கூட படிச்ச 2 பரதேசிகட்ட கேட்டேன் அவனுக நாங்கலாம் பாடி ஸ்ப்ரே போடவே மாட்டோம்னு சொல்லிடணுக.. சரி என்ன பண்ணணு யோசிச்சிட்டு இருந்தப்ப நம்ம அங்க இருந்து ஒரு சவுண்ட் "ஜெ.. எனக்கு பாடி ஸ்ப்ரே வாங்கணும்
நா உன்கூட வரேன்".. நா அப்டி ஸ்லொவ் மோஷன்ல திரும்பி பாத்தா நம்ம ஹீரோ தான் சொன்னது. ஒ நைஸ் போகலாமே நு சொல்லிட்டேன்.. அய்யாஆஆஅ ஜாலி (மனசுக்குள்).. நானே அவன்கூட பேச காத்துட்டு இருக்குற நேரத்துல அவனே என்கிட்ட பேச வரும்போது
ரொம்பவே சந்தோசமா இருந்துது..




ஒரு 7 மணி இருக்கும் எல்லாரும் கெளம்பி வெளிய போனோம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சாமான் வாங்கணும்.. நானும் நம்ம ஹீரோ வும் மோர் சூப்பர் மார்க்கெட் போனோம் பாடி ஸ்ப்ரே வாங்குறதுக்கு..அங்க நெறைய ஸ்ப்ரே இருந்தது நா ஊர்ல இருக்கும் பொது
"எல்-PASO"  தான் யூஸ் பனுவேன் சோ அந்த ஸ்ப்ரே இங்க கிடைக்கும்னு அவன்ட கேட்டேன்.. பாப்போம் கெடைச்ச அத வாங்கு இல்லன வேற ஸ்ப்ரே வாங்கலாம்னு சொன்னான்.. நா நெனைச்ச மாதிரியே அந்த ஸ்ப்ரே மோர் ல இல்ல.. அவன்ட வேற ஒரு நல்ல பரந்து ஸ்ப்ரே
செலக்ட் பண்ண சொன்னேன் அவன் "axe" ல ஒரு ப்ளேவர் வாங்கி தந்தான்.. அவனும் வேற ஏதோ ஒரு ஸ்ப்ரே வாங்கிட்டு வெளிய வந்தோம்.. நம்ம க்ரூப்ஸ் எங்க 2 பேருக்காகவும் வெளிய வைட்டிங்க்..
அப்றமா ஒரு 8 மணி வாக்குல டின்னெர் சாப்டுட்டு எல்லாரும் ரூம்க்கு போனோம்.. மறுநாள் ஆபீஸ்  கு போடுறதுக்கு டிரஸ் அயன் பண்ணனும்.. என்னோட ஒண்ணா படிச்சவங்க கொண்டு வரல.. சோ சாட்.. என்ன பண்ணணு யோசிச்ச அப்போ.. நம்ம ஹீரோவோட கிளாஸ் பய்யன்
ஒருத்தன் எனக்கு தெரியும்னு முன்னவே சொல்லிருந்தேன்..அவன்கிட்ட போய் கேட்டேன் அவன் நம்ம ராஜா வச்சிருக்கன் டா.. வா வங்கி தரேன்னு சொல்லி அவன்கிட்ட கூட்டிட்டு போய் அயன் பாக்ஸ் வங்கி தந்தான்..




இதோட 3வது முறை நம்ம ஹீரோ எனக்கு ஹெல்ப்
பண்ணிட்டான்.. அப்புறம் அவன பத்தின நெனைப்பு கொஞ்சம் அதிகமாவே ஆகிட்டு..
மறுநாள் காலைல ஒரு 7 மணி இருக்கும் நான் எண்திக்கும் போது.. அப்போ எனக்கு முன்னாடியே என்கூட படிச்ச பாலு குளிச்சி ரெடி ஆகிட்டு இருந்தான்.. அப்போ ரூம் ல "என்னமோ ஏதோ " பாட்டு ஓடிட்டு இருந்தது.. அப்பதான் கோ படம் ரிலீஸ் ஆகி ஒரு 3 மந்த்ஸ்
இருக்கும்..அப்புறம் நானும் போய் காலை கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு   குளிச்சிட்டு வந்து ரெடி ஆனேன்.. பாலு என்கிட்ட நாம ஆபீஸ் கு போவோம்னு கேட்டான்.. நானும் சரின்னுட்டு அவன் கூட கெளம்பி முதல்ல ஹோட்டல் க்கு போய் சாப்டுட்டு அப்புறம் ஆபீஸ் பொய்
ரிசெப்ஷன் ல உக்கந்துருந்தோம்.. மத்த 8 பேரும் வந்துட்டாங்க.. எல்லாரும் அவங்க அவங்க ஒரிஜினல் மார்க் சீட் மத்த சேர்டிபிகட் எல்லாம் கொண்டுட்டு உள்ள போனோம்.. ஆபீஸ் நாங்க எதிர் பத்த அளவுக்கு இல்ல.. பக்க நம்ம ஊரு ப்ரொவ்சிங் சென்ட்டர் மாதிரி தான் இருந்தது..


அங்க உள்ள பியூன் அங்க போட்ருந்த ஷேர் ல வெயிட் பண்ண சொன்னா.. நாங்க 5 பேரா 2 டேபிள் உக்காந்து இருந்தோம்.. அப்போ அங்க "HR" வந்தாங்க.. அப்பா என்ன ஒரு அழகு ஐஸ்வர்யா ராய் அ நேருல பத்த எப்படி இருக்கு அதே மாதிரி இருந்தாங்க.. அதுவும் அவங்க கலர்
க்கு கருப்பு கலர் ல சுடி போற்றுந்தங்க.. அப்பா அது 5 வருசத்துக்கு முன்னாடி நடந்தாலும் இப்பவும் கண்ணுகுல்லையே நிக்குது.. அவங்க எங்க பக்கத்துல வந்து உக்காந்து "ஹாய் ஐ அம் பவித்ரா ஷெட்டி" நு அறிமுகம் பண்ணிட்டு ஜொஇனிங்க் பார்மாலிடீஸ் லாம் பண்ணுனாங்க..


அப்புறம் எங்க எல்லாருக்கும் புது சிஸ்டம் குடுத்தாங்க.. மே 9 என்னோட கரியர் ல ரொம்ப முக்கியமான நாள்...எங்களோட வொர்க் நல்ல ஜாலியாதான் ஆரம்பிச்சிது..


அப்புறம் வேற என்ன.. அடுத்தது பிரெஷேர் ட்ரைனிங் பத்தி சொல்ல நல்ல 6 அடி உயரத்துல பென்சில் சைஸ் ல ஒருத்தர் வந்து மெயில் ஐடி க்க்ரியாட் பண்றது பதிலாம் சொல்லி தந்தார்.. "Gtalk" சாட் பண்ண உதவும் உங்க பிரண்ட்ஸ் அ ஆட் பண்ணி வசிகொங்க கு சொல்லி
தந்தார்.. நா என்னோட "Gtalk" ல லாகின் ஆனதும் எனக்கு வந்த முதல் ப்ரண்ட் ரெகெச்ட் வேற யாரா இருக்கும் நம்ம ஹீரோ தான்..ஆஹா சூப்பர் நு நெனைச்சிட்டு டகார்னு அச்செப்ட் பண்ணிட்டேன் ..


ஜெ ஹாப்பி அண்ணாச்சி..




(தொடரும்)

No comments:

Post a Comment