Friday, October 30, 2015

நானும் என்னவனும் - பகுதி4

எனக்கும் என்னோட ரூம் பசங்களுக்கும் நடந்துகிட்டு இருந்த அமைதி போராட்டம் தொடர்ந்து கிட்டே தான் இருந்துச்சி.. ரொம்ப நாளாவே இப்படியே தான் போயிட்டு இருந்துச்சி..படத்துக்கு போறதுல இருந்து சாப்பாடு போற வரைக்கும் எதுக்குமே என்னை கூப்டறது இல்ல.. எனக்கு
இதெல்லாம் நெனைச்சி ரொம்ப சோகமா சில நேரத்துல இருந்தாலும் நா  அத பத்தி பெருசா எடுத்துகிறது இல்ல.. ஒரு கட்டத்துல எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆகிட்டு என்ன பண்ணனே தெர்ல.. வொர்க் ல கவனம் செலுத்த முடியல.. எங்க போனாலும் இந்த பசங்க பண்றதே
நியபகமவே இருந்துச்சி.. இந்த டைம் ல எனக்கு அறிமுகமானவர் தான் ருசி அங்கிள்.. அந்த ருசி ஹோட்டல் ல தான் நா 3 வேலையும் சாப்புடுவேன்.. அவர் நல்ல ஜாலியா பேசுவார் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னோட கஷ்டத்த எல்லாத்தையும் அவர் கிட்ட தான் சொல்லுவேன்..


இந்த நேரத்துல ரூமுக்கு வரும் போது நம்ம ஹீரோ கூட ரொம்பலாம் பேச மாட்டார்  எதுவும் தேவை நா பேசுவார்  ஆனா படுகுரதுலாம் என் பக்கத்துல தான்(நா சும்மா தூங்குனத தான் சொன்னேன் பிரண்ட்ஸ்),மத்த படி ஆபீஸ் ல வச்சி நல்லா தான் பேசுவார்.. அவர் ஆபீஸ் ல
டெஸ்ட் என்ஜினீர் நா டெவலப்பர் சோ என்னோட ப்ரோஜெக்ட்ஸ் எல்லாமே அவன் தான் டெஸ்ட் பண்ணுவன் அதுனால ஆபீஸ் ல வச்சி பேசுறதுக்கு நெறைய டைம் கெடைக்கும்..
இப்படி போயிட்டு இருக்குற கட்டத்துல நா பேசாம வேலைய விட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. அத ருசி அங்கிள் கிட்ட சொன்னேன்.. அவரும் உனக்கு பிடிக்க்கள நா விட்டுரு எதுக்கு கஷ்டபடுற நு அட்வைஸ் பனுனார்.. மறுநாள் ஆபீஸ் போயி நோட்டீஸ் போட்டுட்டேன்.. அத
பாத்ததும் "HR" கூப்பிட்டு ஏன் நீங்க வேலைய விட்டு போறேங்க..நீங்க ஜோஇன் பண்ணி கொஞ்ச நாள் தானே ஆச்சு..அதுவும் இல்லாம நீங்க பாண்ட் ல இருக்கேங்க.. அப்டி போறதா இருந்தா 1 லட்சம் பே பண்ண வேண்டி இருக்கும் அப்டின்னு சொன்னா.. "OMG" எனக்கு தலைல
இடியே விழுந்த மாதிரி இருந்துச்சி.. நம்ம சலரி 7500 தான் இதுல 1 லட்சத்துக்கு எங்க போவேன்.. சரி இவகிட்ட நம்ம நெலமைய எடுத்து சொல்லுவோம்னு நெனச்சிட்டு.. சி பவித்ரா எனக்கு உடம்பு சரி இல்ல பைல்ஸ் ப்ரொப்லெம்.. அதுனால ந வேலைய விடுறேன்னு
சொன்னேன்.. அவ கொஞ்ச நேரம் காம்ப்ரமைஸ் பண்ணி பாத்தா நா என்னோட முடிவுல ஸ்ட்ராங்கா இருந்தேன்.




அப்றமா மேட்டர் "CEO" வர போச்சு.. அவர் என்ன மீட்டிங் ரூம்க்கு வர சொன்னார்.. அவர் நம்ம ஊர் ஆளுதான் டேய் இங்க பாரு உனக்கு சின்ன வயசு இதெல்லாம் ஒரு ப்ரொப்லெம் இல்ல நீ 3 மாசம் ஊருக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வா.. அப்பாவும் உனக்கு உடம்பு சரி
ஆகலான நானே உனக்கு ரிலீவிங் லெட்டெர் தரேன்னு சொன்னார்.. நா ரொம்பவே கெஞ்சி பாத்தேன் ஆனா அவர் என்ன விடுற மாதிரி இல்ல.. சரி ஓகே.. நா ஊருக்கு கேளம்புறேனு சொல்லிட்டேன்.. அவரும் "HR" கிட்ட சொல்லி "IDCard" வாங்கி வைக்க சொல்லிட்டாரு.. உடனே
கம்பெனி விட்டு வெளிய வந்து ருசி ஹோடேல்கு போனேன்.. அங்க பொய் ருசி அங்கிள் கிட்ட நடந்த எல்லா மட்டேரையும் சொன்னேன்..


அவர் எனக்கு ஆறுதல் சொன்னாரு.. நீ சென்னை போடா அங்க நெறைய வேலை கிடைக்கும்..அப்டின்னு ஒரு நம்பிக்கை குடுத்தாரு..சரின்னுட்டு ரூம்க்கு போனேன் நம்ம ரூம் பரதேசிங்க வர வரிக்கும் வெயிட் பண்ணி .. நா ஜாப் ரிசைன் பண்ணிட்டேன்.. நாளைக்கு காலைல
ஊருக்கு கெளம்புறேன்.. நா ரூம் அட்வான்ஸ் குடுத்த 10000 ரூபாய் திருப்பி தந்தா நல்லா இருக்கும் எனக்கு வேற சோர்ஸ் இல்லன்னு சொன்னேன்.. அதுக்கு அவனுக டேய் இப்ப நாங்க 10000 ரூபாய்க்கு எங்க போவோம்.. அப்டின்னு சொன்னனுங்க.. டேய் எனக்கு வேற வலி
இல்லாம தான் நான் உங்க கிட்ட கேக்கேன் எப்படியாவது ட்ரை பண்ணுங்க..




கொஞ்ச நேரம் முனுமுப்புக்கு அப்புறம் சரி ஆனா நாங்க இப்ப கொஞ்ச அமௌண்ட் தான் தருவோம் அப்றமா மொத்த அமௌண்ட் தரோம் அப்படின்னு சொல்லிடணுக.. சரி ஓகே நு நானும் சொல்லிட்டேன்..மறுநாள் காலைல என்னோட ரூம்ல உள்ள ஒருத்தன் போன் பனுனான்..
டேய் ஆபீஸ் கீழ வா அமௌண்ட் தரோம்னு சொன்னான்.. நானும் போனேன் 2000 ரூபாய் தந்தான்.. பலன்சே அமௌண்ட் சலரி வந்ததும் தரோம்னு சொன்னான்.. நா சரி ஓகே டா ஆனா டிலே பணிரதீங்கனு சொல்லிட்டு அந்த அமௌண்ட் ஆ வாங்கிட்டு ஊருக்கு கெளம்பிட்டேன்.
நேரா சாந்தி நகர் பஸ் ஸ்டான்ட்கு போனேன் அங்க தான் தமிழ் நாடு போற "SETC" பஸ் லாம் வரும்., அங்க போய் சென்னை பஸ் ஏறினேன்..நா வேலைய விட்ட விஷயம் பிரண்ட்ஸ் கூட ப்ரொப்லெம் ஆனா விஷயம் எதுவுமே வீட்டுக்கு தெரியாது.. அவங்களுக்கு தெரிஞ்ச
ரொம்ப கஷ்ட படுவாங்க. அதான் நான் சொல்லல.. சென்னை போயி ஒரு நல்ல ஜாப் கெடைச்சதும் சொல்லிக்கலாம்னு இருந்தேன்..."SETC" பஸ் ல ஏறி உக்காந்தேன் கைல இருந்த பாக் அ விட மனசு தான் ரொம்ப கனத்து போயி இருந்துச்சி..


சரி சென்னை முன்ன பின்ன தெரியாத ஊரு அங்க யாரு இருக்கா எனக்கு.. இப்ப போயி இறங்குனது எங்க போய் தங்குவ ? இதேமாத்ரி நெறைய கேள்விகள் மனசுக்குள் ஓடிட்டு இருந்துச்சி!.......................




(தொடரும்)

No comments:

Post a Comment